Friday, October 20, 2006

அரசுப்பணியில் இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்

**********************************
எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சரியே: உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அரசு வேலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது சரியே என்று உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அதே சமயம் ஒட்டுமொத்த ஒதுக்கீடு மொத்தப் பதவியில் 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இச் சலுகை தரப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியது.

தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், கே.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.எச். கபாடியா, சி.கே. தாக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை இத் தீர்ப்பை வழங்கியது.

அரசியல் சட்டத்தின் 77, 81, 82, 85-வது திருத்த சட்டங்களை ஆட்சேபித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் சட்டத்தின் அடிப்படையையே இத் திருத்தங்கள் மாற்றுவதாகவும், அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டப் பிரிவுக்கு முரணாக இச்சலுகை இருப்பதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

அரசு வேலையில் சேர்ந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்குவது மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனச்சோர்வையும், பணியில் ஈடுபாட்டுக் குறைவையும் ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் ஆட்சேபித்தனர்.

இந்த ஆட்சேபங்களை பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஆண்டாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்தைப் பெற, இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை வழங்கும் கருவியாக இங்கே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட துறையில் அல்லது பதவியில் இப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது என்று அரசு கருதினால், இப்படிப் பதவி உயர்வின் மூலம் இப் பிரிவினரை நியமித்துக் கொள்ள அரசுக்கு உரிமை இருக்கிறது.

அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம். அப்படிச் செய்யும்போது யாராவது தங்களுக்கு பாதிப்பு நேரிட்டுவிட்டதாகக் கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது. அதே போல, வசதி வாய்ப்புடன் வாழும் உயர் வருவாய்ப் பிரிவினர் இச் சலுகையை அனுபவிக்க இடம் தரக்கூடாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது. நிர்வாகத் திறனையும் அரசு மனதில் கொண்டு இச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் பெஞ்ச் ஆலோசனை தெரிவித்தது.
*****************************
நன்றி: தினமணி

பி.கு: மேற்கூறிய வழக்கில், இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

1. இடஒதுக்கீடு தொடர்பாக அரசு மேற்கொண்ட அரசியல் சட்ட திருத்தங்கள், திருத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறதா என்பது

2.இடஒதுக்கீட்டை செயல்படுத்தும்போது, Article 16-இல் சொல்லப்பட்டுள்ள சமன்பாட்டையும், கடைபிடிக்கப்பட வேண்டியவற்றையும், அரசு தெளிவாக சீர் நோக்கி பார்ப்பதும், பாவிப்பதும் குறித்து


Article 16 Equality of opportunity in matters of public employment

(1) There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State.

(2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect of, any employment or office under the State.

(3) Nothing in this article shall prevent Parliament from making any law prescribing, in regard to a class or classes of employment or appointment to an office under the Government of, or any local or other authority within, a State or Union territory, any requirement as to residence within that State or Union territory prior to such employment or appointment.

(4) Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.

(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.

(5) Nothing in this article shall affect the operation of any law which provides that the incumbent of an office in connection with the affairs of any religious or denominational institution or any member of the governing body thereof shall be a person professing a particular religion or belonging to a particular denomination.

உச்ச நீதிமன்றம், முக்கியமாக, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு, க்ரீமி லேயர் வரையறுப்பு, தாழ்த்தப்பட்டவர்களையும், பிற பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்து நோக்கல் என்ற மூன்று விஷயங்களும் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டியவை என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அதே போல், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதின் தேவையை (Article 335-க்கு உட்பட்டு) மாநில அரசுகளே நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறது.

Article 335 Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts

The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.

க்ரீமி லேயரை SC/STயில் வரையறுப்பது தேவையில்லை என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு அமல்படுத்தி இத்தனை வருடங்கள் ஆகியும், அவர்களில் பலர் அதன் பலனை முழுமையான அளவில் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்பிரிவினரின் பிரநிதித்துவம், பல துறைகளிலும் இன்றும் குறைவாகவே உள்ளது.

அதே நேரத்தில், OBC-யில் க்ரீமி லேயரை வரையறுப்பது நிச்சயம் தேவையானதே ! அல்லது, OBC-யில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியதாக அறியப்படும் சில சாதிகளை விலக்குதல் வேண்டும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

வஜ்ரா said...

உச்ச நீதிமன்றம் 50% க்கு மேல் இட ஒதுக்கீடு எந்த காரணத்திலும் இருக்கக் கூடாது என்று சொல்வது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு பல காலமாக இருந்து வந்துள்ளது என்பதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். கோர்டில் கேசும் உள்ளது, இதற்கு சீக்கிரமே ஒரு முடிவு வரும் என்று எண்ணுவோம்.

said...

See The Hindu for details.

said...

க்ரீமி லேயரை SC/STயில் வரையறுப்பது தேவையில்லை என நினைக்கிறேன்

அதே நேரத்தில், OBC-யில் க்ரீமி லேயரை வரையறுப்பது நிச்சயம் தேவையானதே

idhu ennaanga nyaayam . namakku puriyale.

SANGAMITHRAN said...

//idhu ennaanga nyaayam . namakku puriyale.
//
பதிவிலேயே காரணம் கூறப்பட்டுள்ளதே

said...

என்ன காரணம்? creamy layer ஐ ஒதுக்க வேண்டும்
என்று சொல்வதுக்கு பின் உள்ள லாஜிக் என்ன? ஏற்கெனவே
இட ஒதுக்கீடு அனுபவித்தர்கள் பின்னால் வருபவர்களுக்கு வழிவிட
வேண்டுமென்கிறார்கள். முன்னேறிய ஐடி கம்பெனியில்
மாதம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் தலித்தின் மகன் மாடு மேய்ப்பவரின் மகனின் வாய்ப்பை பறிக்கலாமா?
இதில் obc என்ன sc என்ன? இரண்டிலுமே
இதே நிலை தானே?

enRenRum-anbudan.BALA said...

//இதில் obc என்ன sc என்ன? இரண்டிலுமே
இதே நிலை தானே?
//
SC/ST representation at various levels / areas of governance is very very less as compared to OBC despite the implementation of reservation for a long time.

Also, majority of them are poor and That is why it is not very much relevant to apply creamy layer for SC/ST quota

enRenRum-anbudan.BALA said...

Vajra, Anony, "The Hindu" anony, Sangamithran,

Thanks for your opinion !

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I am yet to read the full judgment.Based on what has appeared in the media,I think that
the Court has given a reasonable
judgment.Instead of saying a blanket no to promotions on the
basis of caste it has made it
conditional.The inclusion of creamy
layer conecept indicates that creamy layer concept is considered
by the Court as an important component of reservation.

enRenRum-anbudan.BALA said...

Ravi,
Thanks !

I think the Supreme court has provided an opportunity for our politicians to enact a law in parliament to ensure inclusion of creamy layer in SC/ST.

When it is done, the vociferous OBC supporters will ensure that OBC also gets the same benefit which will be a retrograde step !!!

Hope you get the point !

சரவணகுமார் said...

பாலா,
மறுபடியுமா ? இட ஒதுக்கீடா ? :) சரி எப்படியும் திங்களிலிருந்து விவாதம் தொடங்கி விடும்(சனி & ஞாயிறு திபாவளி இல்லையா :)
நடத்துங்க....

"""க்ரீமி லேயரை SC/STயில் வரையறுப்பது தேவையில்லை என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு அமல்படுத்தி இத்தனை வருடங்கள் ஆகியும், அவர்களில் பலர் அதன் பலனை முழுமையான அளவில் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்பிரிவினரின் பிரநிதித்துவம், பல துறைகளிலும் இன்றும் குறைவாகவே உள்ளது.

அதே நேரத்தில், OBC-யில் க்ரீமி லேயரை வரையறுப்பது நிச்சயம் தேவையானதே ! அல்லது, OBC-யில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியதாக அறியப்படும் சில சாதிகளை விலக்குதல் வேண்டும் """"

முற்றிலும் சரி

ரவி ஸ்ரீநிவாஸ் said...

"I think the Supreme court has provided an opportunity for our politicians to enact a law in parliament to ensure inclusion of creamy layer in SC/ST.

When it is done, the vociferous OBC supporters will ensure that OBC also gets the same benefit which will be a retrograde step !!!"


SC has made the exclusion of creamy layer for SCs/STs for the purpose of quotas in promotion.OBCs do not get any reservation in promotions.Perhaps
except Tamil Nadu all other states
have put into effect the creamy layer concept.So they cannot nullify that so easily.
SC had ruled that these amendments
were valid subject to the conditions laid down in the judgment.So it is not going to be
easy for the government to bring
another set of amendments to
nullify the judgment.

abdullah said...

UCHA NEETHI MANTARATHIN ATHIKAARA ELLAI VARAIYARUKKAP PADAVENDUM

abdullah said...

UCHA NEETHIMANTARTHI ATHIKARA ELLAI VARAIYARUKKAP PADAVENDUM

BadNewsIndia said...

I personally don't agree with providing reservations for job promotions.
promotions have to be strictly based on qualifications.

the reservation policy has not worked as expected. It has only been used inappropriately by the various political parties.

The real downtrodden, is still down.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல தெளிவான பதிவு.....இன்னும் பலர் பார்க்கவிலையா?, இல்லை நீங்கள் அவர்களது பின்னுட்டங்களை பிரசுரிக்கவில்லையா?.....ஹிஹிஹி

enRenRum-anbudan.BALA said...

saravanakumar, Abdulla, bad news india, Mouls,

Thanks !

Ravi,
//SC had ruled that these amendments
were valid subject to the conditions laid down in the judgment.So it is not going to be
easy for the government to bring
another set of amendments to
nullify the judgment.
//
Let us wait and see !!!

enRenRum-anbudan.BALA said...

//நல்ல தெளிவான பதிவு.....இன்னும் பலர் பார்க்கவிலையா?, இல்லை நீங்கள் அவர்களது பின்னுட்டங்களை பிரசுரிக்கவில்லையா?.....ஹிஹிஹி
//
Mouls,
This is a BIT TOO MUCH :-)
நான் கருத்துச் சுதந்திரத்தை மிகவும் மதிப்பவன் ;-)

said...

Good post.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails